உடல் எடையைக் குறைக்க முன்னணி நடிகைக்கு டிப்ஸ் கொடுத்த நடிகர்

Webdunia
திங்கள், 3 மே 2021 (22:15 IST)
பிரபல நடிகை உடல் எடையைக் குறைப்பது டிப்ஸ் கொடுத்து உதவி இருக்கிறார் பிரபல நடிகர்.

மலையான சினிமாவில் பிரபல நடிகர் உன்னி முகுந்த். இவர் அவ்வப்ப்போது உடல் எடையை எப்படிக் கட்டுக்குள் வைப்பது என்பது குறித்து தனது சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வருகிறார்.

மேப்படியான் என்ற படத்தில் தொந்தி வயிற்றுடன் காணப்பட்ட அவர் கடுமையான உடற்பயிற்சி மூலம் சுமார் 16 கிலோ எடையைக் குறைத்துஆர். இது எல்லோராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் மலையாள நடிகை அனு சித்ரா தன் உடல் எடையை குறைக்க பெரும் சிரமப்படவே அவர்  நடிகர் உன்னி முகுந்திடன் இதுகுறித்துக் கூறியுள்ளார்.
 
முகுந்த், பெண்களுக்கு உரிய டயட் பற்றிக் கூறியுள்ளார். இதைக் கடைபிடித்த  அவர் ஒரே மாதத்தில் சுமார் 6 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இதற்கு நடிகை அனு சித்ரா முகுந்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்