எது பண்ணாலும் அது அரசியல்தான்… கலை என்பதே அரசியல்தான் – தங்கலான் இசை வெளியீட்டில் பார்வதி!

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (09:20 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது கலந்துகொண்டு பேசிய நடிகை பார்வதி “அரசியல் அற்றது என்று எதுவுமே இல்லை. மிகவும் தனிப்பட்ட விஷயங்களைப் பேசினாலும் அது அரசியல்தான். கலை என்பது அரசியல்தான். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாவது தற்செயல் ஆனது இல்லை. நாம் தொடர்ந்து ஏன் ஒடுக்குமுறை சமத்துவமின்மையும் இருக்கிறது என்பது பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்காக ரஞ்சித் ஒரு ராணுவத்தை உருவாக்கியுள்ளார். அதில் நான் படைவீரராக இருப்பதில் பெருமைப் படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்