தங்கலான் முதல் நாள் வசூல் இவ்வளவா?... மாஸ் காட்டிய விக்ரம் & ரஞ்சித்!

vinoth
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:31 IST)
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்துக்குப் பின்னர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் படம் ரிலீஸான பின்னர் கலவையான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. மேஜிக்கல் ரியலிச பாணியில் படத்தின் கதை சொல்லப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மேல் ஒட்டுதலை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.

ஆனாலும்  படம் நேற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் 13 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது வழக்கமாக விக்ரம் படங்கள் செய்யும் முதல் நாள் கலெக்‌ஷனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய மேஜிக்கல் ரியலிச கதையாக இந்த படத்தை ரஞ்சித் உருவாக்கியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்