மோடி இடத்தை பிடித்த தளபதி விஜய்!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (08:33 IST)
சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள டுவிட்டரில் இந்த வருடம் அதிகம் பேசப்பட்டு ட்ரெண்டிங்கில் வலம் வந்த  இந்திய நபர்கள் குறித்த பட்டியல் ஒன்றை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.


 
இதில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் இடம்பெறுவதுதான் வழக்கம்  மாறாக தற்போது திரையுலக பிரபலங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் டாப் 10 பட்டியலில் 8வது இடத்தில் தளபதி விஜய் பெயர் உள்ளது. டாப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் நடிகர் விஜய் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டுவிட்டரில் அதிகமாக பேசப்பட்ட 10 நபர்களின் பட்டியல் லிஸ்ட் இதோ:
 
1. பிரதமர் நரேந்திரமோடி
2. ராகுல்காந்தி
3. அமித்ஷா
4. யோகி ஆதித்யநாத்
5. அரவிந்த் கெஜ்ரிவல்
6. பவன்கல்யாண்
7. ஷாருக்கான்
8. விஜய்
9. மகேஷ்பாபு
10. சிவராஜ்சிங் செளஹான்
 
மேலும் இந்த பட்டியலில் விஜய் தவிர மற்ற அனைவரும் இந்த ஆண்டு பல டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளனர் என்பதும், தளபதி விஜய் இந்த ஆண்டில் மூன்றே மூன்று டுவிட்டுக்களை மட்டுமே பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்