ஓபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து கூற வந்த தாடிபாலாஜியின் மனைவி நித்யா!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (18:43 IST)
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரையும் பல அரசியல் பிரபலங்கள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவியும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான நித்யா இன்று ஓபிஎஸ் அலுவலகத்தில் வந்து அவரை சந்திக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது 
 
கையில் பூங்கொத்துடன் வந்திருந்த அவர் ஓபிஎஸ் ஐயா அவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியதாகவும் இதனை அடுத்து பாதுகாவலர் போன் மூலம் அனுமதி கேட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்து பேட்டியளித்த நித்யா எங்களது  பெண்கள் இயக்கம் சார்பாக ஓபிஎஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து கூற வந்தேன் என்று கூறியுள்ளார். திடீரென ஓபிஎஸ் அவர்களை சந்திக்க தாடி பாலாஜியின் மனைவி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்