2.0 தெலுங்கு வடிவம் விற்பனையானது –நவம்பர் 29 ரிலீஸ் உறுதி

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (09:59 IST)
ரஜினிகாந்தின் மெகா பட்ஜெட் படமான 2.0 இம்மாதம் 29 –ந்தேதி ரிலீசாக உள்ளதால் படத்தின் வியாபாரம் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படம் பிரம்மாண்டமான வெற்றி அடைந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. மூன்று ஆண்டு இழுபறிகளுக்குப் பிறகு கடைசியாக நவம்பர் 29-ந்தேதி இப்படம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லைகா தயாரித்து இப்படத்தின் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது படத்தின் திரையரங்க உரிமை விற்பனையை லைகா நிறுவனம் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒரே நாளில் அந்தந்த மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் விநியோக உரிமையை என்விஆர் என்ற நிறுவனம் இதுவரையில்லாத ஒரு பெரும்தொகைக்கு வாங்கியுள்ளது. விரைவில் மற்ற மொழிகளில் விநியோக உரிமையும் விற்கப்படும்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்