கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.
பெண்கள் மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: நீலம்
எண்கள்: 3, 6
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.