மீண்டும் தள்ளி போகிறது சின்னத்திரை சீரியல்கள்: சீரியல் பிரியர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (07:09 IST)
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் ஒருசில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது
 
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் வரும் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது
 
இதனை அடுத்து சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உள்ளதால் இந்த முழு ஊரடங்கு உத்தரவு முடியும் வரை படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார் 
 
இதனை அடுத்து வரும் 19-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே இன்னும் ஓரிரு நாளில் புதிய தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மேலும் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. எனவே சீரியல் பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு பழைய எபிசோட்களைத்தான் பார்க்க வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்