பேட்மினிட்டன் பிளேயரை திருமணம் செய்கிறாரா டாப்ஸி ?

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (07:28 IST)
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான “ஆடுகளம்”திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

மேலும் சினிமாவில் நிலவும் ஆணாதிக்கம் சம்மந்தமாக தொடர்ந்து பேசியும் வருகிறார். இவர் பேட்மிண்ட்டன் வீரரான மத்தியாஸ் போ என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு அடுத்த மாதம் இறுதியில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியானது.

இதுபற்றி விளக்கமளித்துள்ள டாப்ஸி “நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்