அதுமட்டும் நடந்தால் அனுராக் காஷ்யப்புடன் தொடர்பை முறித்துக் கொள்வேன் – டாப்ஸி ஓபண்டாக்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:51 IST)
பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி குரல் கொடுத்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மீது பயல் கோஷ் என்ற நடிகை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அனுராக் காஷ்யப் மத்திய அரசை விமர்சித்து வருவதால் அவரின் பெயரைக் கெடுக்கவே இவ்வாறாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக அவரது முன்னாள் மனைவியும், அவரின் எல்லா படங்களின் எடிட்டருமான ஆர்த்தி பஜாஜ், நடிகை தாப்ஸி பண்ணு மற்றும் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருடன் இருக்கும் போது தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்ததாகவும் அனுராக் காஷ்யப் மிகவும் நல்ல மனிதர் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில் ‘அனுராக் காஷ்யப் ஒரு மிகச்சிறந்த பெண்ணியவாதி. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்ப்ட்டால் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்வேன். ஆனால் ஒருவர் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவது நியாமமில்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்