என்னயாடா கிண்டல் பண்ணீங்க…. கடுமையாக வொர்க் அவுட் செய்யும் தமன்னா!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:31 IST)
நடிகை தமன்னா உடல் எடையைக் குறைப்பதற்காக வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா நடிகைகளில் மெல்லிய உடல் தோற்றம் கொண்ட நடிகைகள் பட்டியலில் தமன்னாவும் ஒருவர். ஒல்லியான உடல்வாகால் அவர் நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடிப்பவராக இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்கள் சிகிச்சையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு அவர் உடல் எடை அதிகமாகி விட்டதாகவும் அவர் உடற்பயிற்சிகளைக் கைவிட்டதே அதற்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்திய அவரின் புகைப்படங்கள் இதை உறுதிப் படுத்து போல உள்ளன. தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அவர் சமீபத்தில் வெளியிட அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடையும் விதமாக ஆளே குண்டாக மாறியுள்ளார். இதையடுத்து மீண்டும் பழைய உடல் எடையை அடைவதற்காக ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்