சிஏஏ சட்டத்திற்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

Mahendran
புதன், 13 மார்ச் 2024 (11:15 IST)
சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறிய நிலையில் சிஏஏ சட்டத்திற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகம் கேரளம் உள்பட ஒரு சில மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று முதல்வர்கள் கூறிவரும் நிலையில் இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது :
 
சிஏஏa சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம், இது நாட்டின் நலனுக்கான சட்டம்,  இதற்கும் மாநில அரசுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. மேலும் இந்த சட்டத்தின் மூலம் யாருடைய குடியுரிமையும் நீக்கப்பட மாட்டாது, மாறாக குடியுரிமை சேர்க்கப்பட உள்ளது
 
ஒரு சிலர் இந்த சட்டத்தை தவறாக சித்தரிக்கிறார்கள், இதை பின்பற்றவே மாட்டோம் என்று சில மாநிலங்கள் கூறுகின்றன, இதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு மதத்திற்கு எதிரான சட்டம் என்று தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது 
 
மதத்துக்கு எதிராக இருந்தால் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பார்களா? பிரதமர் அனைவரையும் இணைத்து செயல்படுகிறார். இந்த சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் பிரிவினைவாதிகள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்