டி ராஜேந்தரா இது…? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிட்டாரே!

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (13:13 IST)
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பலதுறைகளில் செயல்பட்டவர் டி ராஜேந்தர். அவரின் படங்கள் 80 களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தின. அதன் பின்னர் அவர் அறிமுகப்படுத்திய அவரின் மகன் சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

சமீபத்தில் டி ராஜேந்தர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு இந்தியா திரும்பினார். அதிலிருந்து அதிகமாக ஊடகங்களில் தோன்றாமல் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி ராஜேந்தர் தன்னுடைய டிரேட் மார்க் ஸ்டைலான நீண்ட தலைமுடி மற்றும் தாடியோடு எப்போதும் காணப்படுவார். ஆனால் அவரின் அந்த புகைப்படத்தில் தலை மற்றும் முகத்தில் முடிகள் எல்லாம் கொட்டி உடல் இளைத்து, எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படும் அவர் சோர்வாகவும் காணப்பட்டார். தலையில் தொப்பி அணிந்து முடிக் கொட்டியதை மறைக்கும் விதமாகக் காணப்பட்டார். அவரின் இந்த லுக் அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்