அஜித் பட தயாரிப்பாளருக்குக் கிடைத்த முக்கிய பதவி – திரையுலகினர் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (07:41 IST)
அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறது. இந்த கடைசி தயாரிப்பான விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து தனுஷை வைத்து வரிசையாக படங்களை தயாரிக்க இருக்கிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் டி ஜி தியாகராஜனுக்கு, இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். புதிதாக பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள  தியாகராஜன் ’பதவி கிடைத்தது எனக்கு எதிர்பாராத ஒன்றாகவும், மகிழ்ச்சியும் அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்