இசைத்துறைக்கும் வந்துவிட்டார் நடிகர் சூர்யா

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (22:12 IST)
கோலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிய சூர்யா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார். இவரது சொந்த நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் '36 வயதினிலே' மற்றும் 'பசங்க 2' ஆகிய படங்களை தயாரித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது




மேலும் ஜோதிகா நடித்து வரும் 'மகளிர் மட்டும்' திரைப்படத்தை தற்போது சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சூர்யா தற்போது இசைத்துறையிலும் தனது காலடியை எடுத்து வைத்துள்ளார். அதாவது இன்று முதல் ஒரு இசை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனம் பிரபல நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் ஆடியோ உரிமையை வாங்கவுள்ளது.

இந்நிலையில் 2D மியூசிக் நிறுவனம், தனது முதல் உரிமையாக 'மகளிர் மட்டும்' உரிமையை பெற்று, நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஒரு பாடலையும் வெளியிடவுள்ளது. ஜிப்ரான் இசையில் அடி வாடி திமிரா' என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்