சூர்யாவுக்கு காயம் என தகவல்: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 25 மே 2020 (08:59 IST)
நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த படம் வரும் தீபாவளிக்கு சூர்யா ரசிகர்களின் விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் சமீபத்தில் சிறிய அளவில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அவருடைய பிஆர்ஓ உறுதி செய்துள்ளார். இருப்பினும் அவரது இடது கையில் ஏற்பட்ட காயம் சிறிய அளவிலானது தான் என்றும், அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும் சூர்யா ரசிகர்கள் இதனால் பதட்டமடைய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
சூர்யாவுக்கு எப்படி அடிபட்டது என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் சூர்யாவுக்கு அடிபட்டது குறித்த தகவல் அறிந்ததும் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யாவுக்கு காயம் என்ற தகவல் கோலிவுட் திரைஉலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சூரரை போற்று படத்திற்கு பின் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்சன் படத்திலும், ஹரி இயக்கத்தில் ‘அருவா’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்