ஜல்லிக்கட்டு காளையோடு வாக்கிங்… சூர்யா பகிர்ந்த செம்ம வீடியோ!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (15:39 IST)
நடிகர் சூர்யா தனது சமூகவலைதளப் பக்கம் மூலமாக ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. சென்னை ஈசிஆர் அருகே ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்ற செட் போடப்பட்டு அதில் இந்த ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் வெற்றிமாறன் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  

மேலும் வாடிவாசல் படத்துக்காக கடந்த சில மாதங்களாகவே சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளோடு பழகி வருகிறார். இந்நிலையில் இன்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் காளையோடு நடந்து சென்று கொண்டே “தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்