ரிலீஸான ஒரு மாதத்திற்குள் ஓடிடியில்..! – ஜி.வி.பிரகாஷின் செல்பி!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (13:34 IST)
ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான செல்பி படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடித்து மதிமாறன் இயக்கி வெளியான படம் செல்பி. இந்த படத்தில் கௌதம் மேனன், வர்ஷா பொலம்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் இந்த மாதம் ஏப்ரல் 1ம் தேதிதான் திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இன்று இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பொதுவாக திரையரங்கில் வெளியாகும் படங்கள் ஒரு மாதம் கழித்து ஓடிடியில் வெளியாகும் நிலையில் செல்பி இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்