சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி புதுக்கோட்டையில் நடைபெற்று வந்தது. ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்தை விறுவிறுப்பாக இயக்கி வந்தார் பாண்டிராஜ்.
ஆனால் கொரோனா இரண்டாவது அலை மிகவும் அச்சுறுத்தும் விதமாக இருப்பதால் படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்துக் கொள்ளும் படி சூர்யா அறிவுறுத்திவிட்டாராம். ஏற்கனவே அவர் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு சிகிச்சையில் தேறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் இந்த முடிவால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.