கொரோனா தொற்று..சூர்யா பட நடிகை உருக்கமான பதிவு

புதன், 5 மே 2021 (21:42 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் கொரொனா தொற்று குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெற்றி பெற்ற படம் வேதம். இப்படம்தான் வானம் என்ற பெயரில்தமிழில் சிம்பு, பரத், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டு மொழிகளிலும் அனுஷ்கா ஒரே கதாப்பாத் திரத்தில் நடித்திருந்தார். அதேபோல்  இவர் பாகுபலி, வேட்டைக்காரன், சிங்கம், ரெண்டு உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களிக்கு ஜோடியாக  நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனொ இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் இதுகுறித்து நடிகை அனுஷ்கா உருக்கமான பதிவிட்டுள்ளார்.

அதில், நாம் தற்போது சந்தித்துவருவது சோதனையாக காலம். இதில், நாம் ஒருவருக்கு ஒருவர் உதவுயுடன் இருப்போம். அரசு கூறியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். மேலும், உங்களால் மற்றவர்களுக்கு முடிந்தளவு உதவுங்கள். நாம் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்து, இத்தொற்றிலிருந்து மீண்டுவருவோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்