இந்த ஆண்டில் விஜய், சூர்யா பட நடிகைக்கு திருமணம்...

வியாழன், 6 மே 2021 (23:32 IST)
தமிழ் சினிமாவில் பிரஷாந்த் நடித்த ஜோடி படத்தில்  சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர் த்ரிஷா. பின்னர் மாடலிங் செய்து வந்த அவர் சிம்பு நடித்த தம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.இதையடுத்து, விஜய்யுடன் திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி, ஆறு, பீமா, மீண்டும் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி -த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் இருவரின் நடிப்பும் பேசப்பட்டது.  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில்  திரிஷா நடித்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் தனது 38 வது பிறந்தநாள் கொண்டாடினார். இவருக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் , தெலுங்கு முன்னணி நடிகை ஷார்மி, தனது டுவிட்டர் பக்கத்தில் திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததுடன், இதுதான் திரிஷாவுக்கு கடைசி பேச்சுலர் பார்ட்டியாக இருக்கும் எனவும் இந்த ஆண்டுக்குள் அவருக்கு  திருமணம் ஆகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்