சூர்யாவின் ''கங்குவா'' பட புதிய அப்டேட்...ரசிகர்கள் குஷி

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (19:34 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா.  இவர் நடிப்பில், சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் படம் கங்குவா.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவன் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் யோகி பாபு, திஷா பத்தானி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 19 ஆம் தேதி சென்னையில் இப்படத்தில் ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும்,  இதில், சூர்யா, திஷா பதானி பாடல் காட்சிகள் ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஷூட்டிங் நடைபெற்ற பின், கொடைக்கானலில் ஷூட்டிங் நடைபெறும் எனத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்