பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் சூர்யா- சுதா கொங்கரா திரைப்படம்!

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (08:37 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த மாதம் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர். டிசம்பர் நான்காவது வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்தது. ஆனால் இப்போது சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷூட்டிங் கல்லூரிக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் கல்லூரி விடுமுறை நாட்களில் இந்த படத்தை எடுக்க பிப்ரவரி மாதம் வரை காத்திருக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாடலை சமீபத்தில் ரெக்கார்ட் செய்துள்ளார் ஜி வி பிரகாஷ். இந்த பாடலை பாடகி தீ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்