சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (20:29 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா.  இவர்  நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவம் படங்கள் வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் கமலுடன் அவர் இணைந்து நடித்த விக்ரம் வசூல் சாதனை படைத்துள்ளது.

தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படப்பிடிப்பு  நடந்து வந்த  நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு  அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இதையடுத்து, சூர்யா- பாலா இணைந்துள்ள சூர்யா41 படம் நடந்து வரும் நிலையில்,. இதனால், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போயுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, வாடிவாசல் படத்தில் இருந்து  ஜிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் ஒரு தகவல் வெளியாகிறது.
இதனால் சுர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்