சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 7 ஜூன் 2024 (15:44 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஷூட்டிங் ஜூன் மாதம் அந்தமான் தீவுகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்லது. இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜோடு ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். இதோடு கலை இயக்குனராக ஜாக்கியும், படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தற்போது அந்தமானில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அன்று படத்தின் டைட்டிலும் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்