ஓவியாவை ஆதரிக்கும் விதமாக ட்வீட் செய்த நடிகை த்ரிஷா!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (13:25 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்யப்படுவது விதியாகும். தொடர்ந்து 3 வாரங்களாக எலிமினேஷன் பட்டியலில் இருந்த ஓவியா, மக்களின் ஆதரவை பெற்று தொடர்ந்து நீடிக்கிறார். இதற்கு காரணம் அவருடைய குணம், துணிச்சல்  மற்றும் பேச்சுதான் நாளுக்கு நாள் அதிக பாரட்டுக்கள் கிடைக்க காரணமாக உள்ளது.

 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஓவியாக்கும் காயத்ரி மற்றும் நமீதாவுக்கும் இடையே ஏராளமான கருத்து மோதல்கள் இருந்து வந்தது. இதனால் ஓவியாவும் பரணியைபோல் தனிமைப் படுத்தப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்களிடயே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஓவியா ரசிகர்கள் தங்களின் ஆதரவை ஓட்டுகளின் மூலம் உறுதி செய்தார்கள். 
 
இந்நிலையில் நடிகை த்ரிஷா, ஓவியாவுக்கு ஆதரவானது போன்ற எந்த பெயரும் குறிப்பிடாமல் ஒரு ட்விட்டரில் தன்னுடைய  கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் எந்த ஒரு சூழலிலும் யாராக இருந்தாலும் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது  நிஜமாகவே இருந்தாலும் அல்லது வேடிக்கையாக இருந்தாலும், எளியவர்களைக் கொடுமைப்படுத்துதல் என்பது  கோழைத்தனமான செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த பதிவு தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும், ஓவியாக்கும் பொருத்தமாக இருப்பதால் த்ரிஷாவின் பதிவுக்கு பாராட்டுகள்  குவிந்து வருகின்றன.
அடுத்த கட்டுரையில்