சூப்பர் ஸ்டாரின் புதிய படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:01 IST)
தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் நடிகர் மகேஷ்பாபு.

இவரை தெலுங்குசினிமாவின் பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கின்றனர் ரசிகர்கள். இவரது ஒவ்வொரு படமும் வசூலை வாரிக்குவிப்பதால் இவர் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தற்போது ’’சர்காரு வாரி பாட்டா’என்ற பிரமாண்ட ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது ரிலீஸாகும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கு நிலையில் இன்று இப்படத்தைக் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

’’சர்காரு வாரி பாட்டா’படம் அடுத்தாண்டு(2022) சங்கராந்தி அன்று  தியேட்டரில் ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்