பிறந்தநாள் அன்று ….ரசிகர்கள் இதைச் செய்ய வேண்டாம் – சிம்பு அறிக்கை

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (15:42 IST)
தனது பிறந்தநாளுக்கு என் வீட்டின் முன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம் என நடிகர் சிம்பு ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். இப்படம் வெற்றிகரமான தியேட்டர்களில் ஓடி வருகிறது.

இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தேசிய விருது இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வேல்ஸ் ஃபிலிம் இன்ஸ்டர்நேஷனல் தலைவர் ஐசரி கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில்  தான் தயாரிக்கவுள்ள அடுத்த படத்திற்கு சிம்புவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளதாகப் பதிவிட்டார்.

இப்படம் சிம்புவின் 47 வது படம் என்பதால் இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனம் இயக்கவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். அநேகமாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகமாக இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

சிம்பு தொடர்ச்சியாக நிறைய படங்கள் வைத்திருப்பதால் இந்த வருடம் சிம்புவின் வருடம் என ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு என் வீட்டின் முன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம் என நடிகர் சிம்பு ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. #SilambarasanTR #Atman
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : பிப்ரவரி 3 ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று நான் ஊரில் இருக்க மாட்டேன் என்பதால் என் வீட்டின்முன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ’’என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு என் பிறந்தநாளில் நான் உங்களுடன் இருக்க வேண்டும்..ஆனால் சில முன் தீர்மானங்களால் தான் வெளியூர் செல்லவுள்ளதாகவும், அதனால் பிப்ரவரி 3 ஆம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகும்...உங்கள் அன்பிற்குக் கடமைப்பட்டுள்ளேன்’’ என சிலம்பரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்