சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலிஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (17:39 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 
‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
ரஜினியுடன் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்