சுந்தர் சி.யின் சங்கமித்ரா - சங்கமிக்க மறுத்த சூர்யா, விஜய்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (10:48 IST)
ஸ்ரீ தேனாண்டாள் மூவிஸ் தங்களின் 100 -வது படத்தை பிரமாண்டமாக தயாரிப்பதும், சரித்திரப் படமான அதனை சுந்தர் சி. இயக்குவதும் அறிந்ததே.


 


ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் பட்ஜெட் 250 முதல் 350 கோடிகள்வரை என்கிறார்கள்.
 
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் நடிக்க முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டுவதுதான் வழக்கம். ஆனால், சங்கமித்ரா என்றாலே வேண்டாம் சாமி என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
 
இந்த சரித்திரப் படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டு, அதனை சூர்யாவே மறுத்தார். பிறகு விஜய் நடிப்பார் என்றார்கள். அவரும் சங்கமித்ராவில் நடிக்கப் போவதில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. 
 
அப்படியானால் சங்கமித்ராவின் நாயகன் யார்?
 
பதிலுக்காக மொத்த திரையுலகமே காத்திருக்கிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்