ஆனால் அதன் பின்னர் தமன் இசையமைப்பாளராக வெற்றி பெற்றார். தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இப்போது தமன்தான் ஆஸ்தான இசையமைப்பாளர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் இதயம் முரளி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்லி அறிவுரைக் கூறுவதில்லை. ஏனென்றால் திருமண வாழ்க்கை என்பது இப்போது கடினமாகி வருகிறது. இன்றைய பெண்கள் யாரையும் சார்ந்திருக்காமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதுதான் காரணம்.” எனக் கூறியுள்ளார்.