கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சுந்தர் சி ஒரு வெற்றிகரமான இயக்குனராக உள்ளார். கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதுதான், அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் கார்த்தி, சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இருவரும் இது சம்மந்தமாக சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இந்த படத்தை கார்த்தியின் நண்பரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.