சுனைனா நடிக்கும் ''ரெஜினா'' பட டீசர் ரிலீஸ்

Webdunia
புதன், 31 மே 2023 (19:34 IST)
சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள ரெஜினா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை சுனைனா. இவர் தற்போது மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு சதீஸ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பவி.கேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டிருந்தார்.

இந்த  நிலையில், ரெஜினா படத்தின் டீசரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த டீசரை  நடிகர் ஆர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்