சாதித்த சகோதரிகள் சுஷ்மிதா- ஐஸ்வர்யா; பண்ருட்டி விவசாயி வீட்டில் இருந்து 2 ஐஏஎஸ் அதிகாரிகள்

வியாழன், 25 மே 2023 (19:48 IST)
பண்ருட்டி விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கை இருவரும் குடிமைப் பணி அதிகாரிகளாகி உள்ளனர். தங்கை ஏற்கெனவே யுபிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்த நிலையில், அக்கா தற்போது குடிமைப் பணியில்  தேர்ச்சி பெற்றுள்ளார். 
 
தங்கை ஐஸ்வர்யா ராமநாதன் சார் ஆட்சியராக உள்ள நிலையில், அக்கா சுஷ்மிதாவும் தற்பொழுது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களுக்கு, இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு (Mains), நேர்காணல் (Interview) என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
 
இந்த நிலையில் 20222ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று வெளியாகின. 
 
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (23.05.2023) அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 
இந்த நிலையில், கடலூர் அருகே ஒரே வீட்டில் இருந்து இரு சகோதரிகள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முந்திரி விவசாயி ராமநாதன். இவரின் மகள் சுஷ்மிதா ராமநாதன் குடிமைப் பணித் தேர்வில் அகில இந்தியத் தர வரிசையில் 528-ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 
 
சார் ஆட்சியராக உள்ள தங்கை
 
சுஷ்மிதாவின் தங்கை ஐஸ்வர்யா ராமநாதன் பொன்னேரி சார் ஆட்சியராக உள்ளார். ஐஸ்வர்யா கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் பெற்றவர் ஆவார். இவர் அப்போது தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள்கள் இருவரும் இந்தியாவின் தலைமை நிர்வாகப் பணிக்குத் தேர்வாகி உள்ளது கடலூர் மாவட்ட மக்களை ஆழ்த்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்