தயாரிப்பாளரே இசையமைக்கும் சுனைனாவின் த்ரில்லர் படம்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (18:00 IST)
தயாரிப்பாளரே இசையமைக்கவுள்ள படத்தில் நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் 
 
தொழிலதிபர் சதீஷ் நாயர் என்பவர் தயாரிக்கும் திரைப்படம் ரெஜினா.  இந்த படத்திற்கு  அவரே இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
டோமின் டி சில்வா என்பவர் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சுனைனா நடிக்க உள்ளார். இந்த படத்தில் சுனைனாவின் கணவராக நாக் அஸ்வின்  நடித்திருக்கும் இந்த படம் சராசரி குடும்பத்து பெண்ணின் காணாமல் போன கணவனை தேடும் கதை என்பது குறிப்பிடத்தக்கது
 
பொள்ளாச்சியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்