சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட்…. பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் விஜய் சேதுபதி!

திங்கள், 4 ஏப்ரல் 2022 (21:52 IST)
சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் வெளியிடுகின்றனர்.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் தமிழில் ஒப்பந்தமான வீரமாதேவி திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை திரில்லர் படமான ஓ மை கோஸ்ட்டில் நடிக்கிறார். இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்துவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபுவும், நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட உள்ளனர். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 6. 4.22 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்