பொங்கலுக்கு சன் டிவியில் அண்ணாத்த… ப்ரமோஷன் வெளியீடு!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (14:40 IST)
சன் தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு வேண்டுமென்றே ஒரு சிலர் விமர்சனங்கள் நெகட்டிவ் விமர்சனம் தந்தாலும் குடும்ப ஆடியன்ஸ் திரையரங்குகளை நோக்கி குவிந்ததால் இந்த படம் வசூலில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை ஆனதை அடுத்து சமீபத்தில் அண்ணாத்த’படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் தங்கச் செயின் பரிசாக அளித்துள்ளார்.

இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையன்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு அண்ணாத்த படம் ஒளிபரப்பாகும் என சன் டிவி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்