’சூர்யா 40’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (13:13 IST)
நடிகர் சூர்யாவின் 40வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் அந்த அறிவிப்பு சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் அனேகமாக இந்த படத்தில் சத்யராஜ், சூர்யா அல்லது பிரியங்கா மோகனுக்கு தந்தையாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஏற்கனவே நடிகர் சிவகுமார் மற்றும் கார்த்தியுடன் நடித்துள்ள சத்யராஜ் தற்போது முதல்முறையாக சூர்யாவுடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாண்டிராஜ் இயக்கத்தில் டி இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்