விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது திரைப்பட இயக்கத்தில் அதிக கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் தன்னுடைய கதை ஒன்றை விஜய்யின் மகன் சஞ்சய்யைக் கதாநாயகனாக்கி இயக்க முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் சஞ்சய் நடிப்பை விட இயக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவதால் எப்படியாவது அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைக்க தொடர் முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.