இறந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் – ஸ்டாலின் அறிக்கை!

Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (13:30 IST)
மதுரையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியான இரண்டு தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மதுரை, ஜவுளிக்கடை தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்கள். வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இரு குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.

இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் கிருஷ்ணமூர்த்தி(30), சிவராஜன்(36) ஆகிய இரண்டு தீயணைப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ‘மதுரை, ஜவுளிக்கடை தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்கள். வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இரு குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.' எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்