புனித் ராஜ்குமாரின் ''ஜேம்ஸ்'' படம் வசூல் சாதனை !

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (16:18 IST)
பிரபல கன்னட நடிகரான மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ்  நேற்று கோலாகலமாக  ரிலீஸாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.

கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறக்கும் முன்னதாக புனித் ராஜ்குமார் “ஜேம்ஸ்” என்ற படத்தில் நடித்து வந்தார்.

இப்படம்  நேற்று திரையங்குகளில் வெளியாகிபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புனித் ராஜ்குமாரின் ஸ்டைலிஸான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.  புனித் ராஜ்குமாருக்குப் பதில் இப்படத்தில் அவரது அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் பேசியிருந்தார்.

இந்நிலை இப்படம் கன்னட சினிமாவில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. நேற்று இப்படம் வெளியான முதல்  நாளில் ரூ.22 கோடி வசூலித்து இதற்கு முன் கர்நாடகாவில் வெளியான அனைத்துப் படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. இப்படம் மேலும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்