இப்படியெல்லாமா செய்தி போடுவது? ‘கைதி’ கதை குறித்து எஸ்.ஆர்.பிரபு வேதனை!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (10:01 IST)
கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘கைதி’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் கதை ஒரு திருட்டு கதை என்றும், உண்மையிலேயே சிறையிலிருந்த கைதி ஒருவரிடம் கதையை கேட்டு அவருக்கு ரூபாய் 15,000 மட்டும் கொடுத்து ஏமாற்றி, எஸ்.ஆர். பிரபு மற்றும் லோகேஷ் கனகராஜ் நூற்றுக்கணக்கான கோடி சம்பாதித்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி ‘கைதி 2’ படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், ‘கைதி’ கதைக்கு சொந்தக்காரரான முன்னாள் கைதிக்கு ரூபாய் நான்கு கோடி இழப்பீடு தர நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த செய்தி குறித்து மனவருத்தத்துடன் எஸ்ஆர் பிரபு தனது ட்விட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குனரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா! 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்