இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சூரி!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:08 IST)
தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்களுக்கு விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றுவருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலமாக அறிமுகமான வெற்றிமாறன் அடுத்தடுத்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் மற்றும் விடுதலை ஆகிய திரைப்படங்களை இயக்கி முடித்துள்ளார்.

இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். இப்போது விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்து வாடிவாசல் 2, வடசென்னை 2, விஜய் படம் மற்றும் கமல் படம் என பிஸியான லைன் அப் வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் இன்று தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து நடிகர் சூரி அவரின் பிறந்தநாளை முன்னிட்டு “எளிய மக்களின் வாழ்வியல் பேசும், உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும், மாபெரும் படைப்பாளி அண்ணன் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்