சூரியின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (16:21 IST)
சூரி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பெயர்களை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சூரி தற்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வெளியான விடுதலை, கருடன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வரும் வெள்ளிக்கிழமை ’கொட்டுக்காளி’ காளை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூரி ஹீரோவாக நடிக்கும் இன்னொரு திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே விமல் நடித்த விலங்கு என்ற வெப் தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை கருடன் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சூரிய தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'கருடன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் திரு.கே. குமாருடன் இணைகிறேன்.‌ இத்திரைப்படத்தை 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய திரு‌.பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கும்,  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்