மார்க்கெட் இல்லாதபோதும் அடம்பிடிக்கும் நடிகை

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (20:26 IST)
மார்க்கெட் இல்லாவிட்டாலும் வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறாராம் இந்த குட்டி குஷ்பு.


 

 
குட்டி குஷ்பு என தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் நடிகை சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் சரியான போகாத காரணத்தினால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. 
 
இதனால் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சம்பளம் அதிகம் கேட்டாலும் தர தயாரிப்பாளர்கள் தயாராக இருந்துள்ளனர். ஆனால் மார்க்கெட் இல்லை என இறங்கி வந்தால் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என நினைத்து மறுத்து விடுகிறாராம்.
 
இந்நிலையில் டான்ஸ் மாஸ்டருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை வைத்து மீண்டும் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட்டை பிடித்து விடலாம் என நினைத்துள்ளாராம். 
அடுத்த கட்டுரையில்