நெட்பிளிக்ஸில் உலக டிரண்ட்டிங்கில் டாக்டர் திரைப்படம்!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (11:39 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்ததை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு அடுத்த நாள் நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் பட்டியலில் டாக்டர் திரைப்படம் 10 இடங்களுக்குள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்