மீண்டும் சன் பிக்சர்ஸோடு கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்!

வியாழன், 18 நவம்பர் 2021 (11:23 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சிவகார்த்திகேயன் தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வந்த போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளைதான் திருப்புமுனை வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் சிவகார்த்திகேயன் இப்போது வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த படத்தை இயக்குவதற்கான இயக்குனர் தேடும் படலம் நடந்து வருகிறது. இயக்குனர் முடிவானதும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்