சிவகார்த்திகேயனின்' டான்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு ?

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (19:19 IST)
சிவகார்த்திகேயனின் டான் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிய இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
இவ்விலையில் டான் படம் அடுத்தாண்டு பிப்ரவரி 26 ஆம் நீதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை இப்படக்குழு உறுதிபடுத்தவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்