புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மீது கவனம் அதிகமாக விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் தமிழ்- தெலுங்கு மொழி படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் தொடங்க உள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பாண்டிச்சேரியில் நடப்பதாக இருந்தது. ஆனால் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சத்யராஜுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். இன்னும் சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதால், படப்பிடிப்பு அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.