சதீஷின் ‘நாய்சேகர்’ படத்தில் சிவகார்த்திகேயன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (18:34 IST)
காமெடி நடிகர் சதீஷ் தற்போது ‘நாய்சேகர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கிசோர் ராஜ்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பதாகவும் இந்த பாடலுக்கு அனிருத் சூப்பராக கம்போஸ் செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்